Wed. Aug 21st, 2019

புதுக்கோட்டையில் போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

24 Views

புதுக்கோட்டை:காவல்துறை துணைத்தலைவர் திருச்சி சரகம் அவர்களின் உத்தரவிற்கிணங்க 17.07.2019 ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதுக்கோட்டை நகர உட்கோட்டம் நகரக் காவல் நிலையம் சார்பாக போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் பெரியார் நகர், கம்பன் நகர், பூங்கா நகர் பொதுமக்கள், மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி விளையாட்டு வீரர்கள், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களைக் கொண்டு புதுக்கோட்டை நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ப . ஆறுமுகம் அவர்கள் தலைமையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. அனந்த நாராயணன் அவர்கள் துவக்கி வைத்து கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் திரு.பரவாசுதேவன், நகரக் காவல் நிலையம், திரு. அப்துல் ரஹ்மான், கணேஷ் நகர் காவல் நிலையம், உதவி ஆய்வாளர்கள், தாலுகா காவலர்கள், ஆயுதப் படை காவலர்கள்,  பொதுமக்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேனீர் வழங்கி உபசரிக்கப்பட்டது.

இப்போட்டியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்கள் முதல் பரிசையும், காவல் துறை அணியினர் இரண்டாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுக்கோட்டை நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ப . ஆறுமுகம் அவர்கள் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!