Sun. Aug 18th, 2019

கொள்ளையர்களை விரைவாக கைது செய்த தனிப்படையினருக்கு ஐ.ஜி பாராட்டு

18 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராசுரம் காய்கறி மார்க்கெட் இருந்து பணம் ரூ.14,90,000 எடுத்துக்கொண்டு பேங்கில் செலுத்த செல்லும்போது swift car, மற்றும் xuv காரில் வந்த நபர்கள் பணத்தை பிடிங்கி சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட தனிப்படை 657 km CCTV footage ஆய்வு செய்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகளை துப்பாக்கி முனையில் கைது செய்து மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய swift car, மற்றும் xuv car பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை கும்பல் சென்னையில் இயங்கி வரும் ஆயில் கம்பெனி முதலாளிகளை மிரட்டி பணம் பறித்து கொள்வதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வரதராஜு இ.கா.ப அவர்கள் உடன் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படையினரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!