Sun. Aug 18th, 2019

பற்றி எரிந்த கள்ளக் காதல் விவகாரம்- திருச்சி இளைஞர் எரித்துக் கொலை

துறையூர் அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யபட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
14 Views

திருச்சி : திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ளது வேங்கடத்தானூர் கிராமம். இங்குள்ள தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் துறையூர் அருகே மருவத்தூரில் உள்ள வெடிமருந்து ஆலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் பிரபாகரனின் பக்கத்து வீட்டுக்காரரான சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலை உடன், தவறான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சந்திரகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே பிரபாகரன் மற்றும் அவரது மனைவியை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கேட்கவில்லை. அடிக்கடி தவறான விஷயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால் கோபம் கொண்ட சந்திரகுமார், பிரபாகரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பிரபாகரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, நெருப்பை பற்ற வைத்துள்ளார்.

இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் துறையூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் சந்திரகுமார் மற்றும் அவரது தந்தை முத்துசாமியை கைது செய்தனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!