Wed. Aug 21st, 2019

குற்றவழக்குகளில் தொடர்புடையவன் குண்டர் சட்டத்தில் கைது

18 Views

வேலூர் : அரக்கோணம் அருகே மின்னல் காலனியை சேர்த்தவர் பஸ்வான் (வயது 24), இவர் மீது அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிதடி வழக்கில் பஸ்வானை அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் திரு.சிரஞ்சீவிலு ஆகியோர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பஸ்வானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ்குமார், IPS கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பஸ்வானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!