Wed. Aug 21st, 2019

கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்

22 Views

கோயம்புத்தூர்: கோவையில் நீண்டநாட்களுக்குப் பின் திடீர் மழை பெய்ததால், சாலையெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கோவை ரயில் நிலையம் பகுதியில் சாக்கடையுடன் கலந்த மழைநீர் லங்கா கார்னர் பாலத்தின் கீழ் தேங்கி நின்றது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோர், உடனடியாக பாலத்தின் அடியில் தேங்கி நின்ற சாக்கடை கலந்த மழை நீரை அகற்றும் பணியில் களம் இறங்கினர்.

கொட்டும் மழையிலும் காவலர்களின் பணியை அவ் வழியே வந்த பொதுமக்கள் மிகவும் பாராட்டினர். போக்குவரத்து காவலர்கள் என்றால் வாகனங்களை வழிமறித்து மாமூல் வாங்குபவர்கள் என்ற நிலை காணப்படும் இக் காலத்தில் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த காவலர்களின் செயல்பாடு, உண்மையிலேயே பாராட்டுக்குரியது. கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!