Sun. Aug 18th, 2019

திருவள்ளூரில் பக்கோடா கேட்டதால் 4 வயசு சிறுமி கொன்று புதரில் வீசிய கொடூரன் கைது

17 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் ‘ஹாலோ பிளாக்’ என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலைநிமித்தமாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இவரது 4 வயசு பெண் குழந்தை இஷானி கடந்த 14-ம் தேதி சாயங்காலம் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் குழந்தை மாயமானாள். இதனால் பதறி போன பெற்றோர் எல்லா இடங்களிலும் குழந்தையை தேடி அலைந்தனர். கடைசியில் போலீசிலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், மறுநாள் காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்த நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக காவல்துறையினர் தகவல் கூறப்பட்டது. இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.

சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், 4 நாள் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையாளியை கண்டுபிடித்துவிட்டனர். அதே தொழிற்சாலையில் வேலை செய்து வரும், நிலக்கர் என்பவர்தான் குழந்தையை கொன்றார் என்பதும், இவர் அமீத்தின் சொந்தக்காரர் என்பதும் தெரியவந்தது. வயசு 22 ஆகிறது. காவல்துறையினர் நிலக்கர் அளித்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:

‘இஷானியை வழக்கமாக நான்தான் சாயங்கால நேரத்துல வெளியில கூட்டிட்டு போனேன். கடந்த 14ம் தேதி மாலையும் அப்படித்தான் வெள்ளவேடுக்கு அழைத்து சென்றேன். அங்கு ஒரு டாஸ்மாக் கடையில் தண்ணி அடிச்சேன். அதுக்கப்புறம், சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டு இஷானியை திரும்ப அழைத்து வந்தேன். வழியில், சிறிய பாலத்தின் சுவரில் இஷானியை உட்கார வைத்துவிட்டுஇ நான் மட்டும் சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன். அப்போது அவள், ‘எனக்கும் சிக்கன் பக்கோடா கொடு’ என்று கேட்டாள்.

நான் தர மறுத்தேன். அதனால் என் கையை பிடிச்சி அவள் கடிச்சிட்டாள். இதனால எனக்கு ஆத்திரம் வந்தது. அதனால் இஷானி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். ஆனால் அவள் பாலத்தின் சுவரில் இருந்து கீழே விழுந்துவிட்டாள். அப்போது முகமெல்லாம் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அப்படியே துடிச்சு இறந்து போய் விட்டாள். இதை பார்த்து நான் பயந்துவிட்டேன். உடனே, அவளது உடலை தூக்கிவந்து சூளைக்கு பின்னாடி உள்ள முள் புதரில் வீசிட்டேன்’ என்றார். இதையடுத்து நிலக்கரை கைது செய்த காவல்துறையினர், பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!