Wed. Aug 21st, 2019

கோவையில் சீருடையில் கேமரா பொறுத்தி போலீசார் ரோந்துப் பணி

27 Views

கோவையில் போலீசார் சீருடையில் கேமரா பொறுத்தி சோதனை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் பணி துவங்கியுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 70 காவலர்களுக்கு கேமராக்களை காவல் ஆணையர் சுமித் சரண் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியர் அவர், இதன் மூலம் கண்காணிப்பு பணியை மேம்படுத்த முடியும் என்றார்.

போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்கும் போலீஸ் ஐ ஆப்பை இதுவரை 16000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகார்கள் மூலம் 71 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் 14100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தனியார் பேருத்துகளில் ஏர்ஹாரன் மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!