Wed. Aug 21st, 2019

தலைகவசம் அணியாததால் பிரிந்த உயிர் – கண் கலங்கிய போலீசார்

30 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஸ்டீபன் 10.07.2019-ம் தேதியன்று தனது மனைவியுடன் கொட்டங்காடு விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணித்தார். இதனையறிந்த திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாரத் அவர்கள் ஸ்டீபனின் இறுதிசடங்கில் கலந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் வாகன ஓட்டிகள் போலீசார் விதிக்கும் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட் அணிய வேண்டாம்¸ ஓட்டுனர் மற்றும் அவர்களின் குடும்ப நன்மைக்காக தலைகவசம் அணிய வேண்டும் எனக்கூறி கண் கலங்கினார். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த அனைவரிடமும் இனி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைகவசம்; அணிந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்து ஸ்டீபனின் சகோதரருக்கு தலைகவசம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!