Wed. Aug 21st, 2019

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு சுற்றுப்பயணம், SP அருண் பாலகோபாலன் துவக்கி வைத்தார்

29 Views

தூத்துக்குடி:உடல் உறுப்பு தானங்களை வலியுறுத்தி சமூக ஆர்வலர் இருசக்கர வாகனத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இதனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவ சுப்பிரமணியன் என்பவர் இரத்த தானம், கண்தானம், உடல்தானம், ஸ்டெம்செல் தானம் ஆகிய வலியுறுத்தி திருப்பூரில் இருந்து புறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தனது இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் 14வது மாவட்டமாக இன்று(15.07.2019) தூத்துக்குடி வந்தடைந்தார்.

இவரை ஆல் கேன் டிரஸ்ட், முத்து கண்கள் மற்றும் விளைவுப்பூக்கள் போன்ற சமூக சேவை அமைப்புகள் வரவேற்பளித்து அவரை உற்சாகப்படுத்தினார். இவரது விழிப்புணர்வு பயணத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கொடியசைத்து துவக்கி வைத்து உற்சாகப்படுத்தினார்.

இதில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக மோகன்தாஸ், கமல் தனசேகர், தினேஷ் குமார், விளைவு பூக்கள் சார்பாக விண்மீன் பாலா, அருள் மகேஸ்வரன் மற்றும் முத்துக்கண்கள் சார்பாக மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பால முருகன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!