Wed. Jul 17th, 2019

தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்ட 82 மொபைல் போன்கள் மற்றும் பணம் – அசத்தும் மதுரை போலீஸ் சைபர் கிளப்

14 Views

மதுரை மாவட்ட: காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் திருட்டு மற்றும் தொலைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை போலீஸ் சைபர் கிளப்பின் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை செய்ததில் சுமார் ரூ.7.27 லட்சம் மதிப்புள்ள 82 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் 09.07.2019-ம் தேதியன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். இது மட்டுமல்லாமல் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை சுமார் ரூ.3 லட்சம் பணம் உரியவர்களின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வங்கி விவரங்களை எவரிடமும் தெரியபடுத்த வேண்டாம் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையும் வழங்கினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!