Sun. Jul 21st, 2019

திருச்சியில் ரவுடி கொலை பெண் அதிகாரி கைது

12 Views

திருச்சி மாவட்டம்: திருவெறும்பூர் அருகேயுள்ள மேலே குமரேசபுரத்தை சேர்ந்தவர் ரஜினி (எ) கருப்பையா (32). ரவுடி. நேற்று முன்தினம் ரஜினி தனது நண்பர் ரஞ்சித்தோடு மொபட்டில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த ஒரு கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டியது. இதில் ரஜினி இறந்தார். ரஞ்சித் காயத்துடன் தப்பினார். இதையடுத்து சம்பவ இடம் வந்த திருவெறும்பூர் போலீசார் காரில் தப்பிய குற்றவாளிகளை கிருஷ்ணசமுத்திரம் என்ற பகுதியில் மடக்கி பிடித்தனர். காரில்  இருந்த குருபாகரன் (46),கார்த்தி (23),சசிகுமார் (22),சுரேஷ்குமார், குருபாகரன் மனைவி நித்யா (40) ஆகியோரை கைது செய்தனர். இதில் நித்யா மின் வாரிய உதவி பொறியாளராக இருக்கிறார்.

விசாரணையில் ரஜினியின் மீன் பண்ணையில் குருபாகரனை பங்குதாரராக சேர்ப்பதாக ரஜினி 3 லட்சம் வாங்கியிருக்கிறார். பண்ணை தொழில் நலிவடைந்ததால் குருபாகரன் பங்கு தொகையை கேட்டிருக்கிறார். அதற்காக தனது காரை ரஜினி தந்திருக்கிறார். பின்னர் காரை விற்கு பணம் தருவதாக கூறி காரை வாங்கிய ரஜினி காரை விற்றும் பணத்தை தரவில்லையாம். இந்நிலையில் ரஜினி நித்யாவுக்கு போன் செய்து தரக்குறைவாக பேசியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரஜினியை கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி கொலை வழக்கில் ஒரு பெண் மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!