Sun. Jul 21st, 2019

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பற்றியும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்த போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டு

9 Views

சென்னை: தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பற்றியும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்த போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டு.

D-2, அண்ணாசாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.G.K.மணவாளன் அவர்கள் கடந்த 01.07.2019 அன்று அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த போது, மாலை சுமார் 5.30 மணியவில் அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்த போது அதில் ஒருவர் போக்குவரத்து ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போக்குவரத்து ஆய்வாளர் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பற்றியும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்துள்ளார். சிறப்பாக பணிபுரிந்த அண்ணாசாலை போக்குவரத்து ஆய்வாளர் திரு.G.K.மணவாளன் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் அன்று (05.7.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!