Wed. Jul 17th, 2019

பணியின் போது விழிப்புடன் செயல்பட்ட காவல் ஆளிநர்களை காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டினார்

8 Views

சென்னை: பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். அடையார் பகுதியில் காரில் கத்தியுடன் சுற்றிய இரண்டு நபர்கள் கைது. 5 கத்திகள் மற்றும் 1 கார் பறிமுதல்.J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.T.செந்தில்குமரன் அடையார் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜ்குமார், தலைமைக்காவலர் திரு.தீனதயாளன் (HC 20914) ஆகிய மூவரும் கடந்த 02.07.2019 அன்று இரவு 11..30 மணியளவில் அடையாறு, KBN சிக்னல், சங்கீதா ஹோட்டல் அருகே வாகன வேகமாக வந்த Maruti Swift காரை நிறுத்தி சோதனை செய்த போது, காரிலிருந்து கீழே இறங்கி ஓடினார். போலீசார் தூரத்திச்சென்று தப்பியோடிய குற்றவாளிகளில் இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். மற்றொரு குற்றவாளி தப்பிச்சென்றுவிட்டார்.

மேலும் காரை சோதனை செய்த போது காரில் 5 கத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததன் பேரில் அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.ராஜா வ/ 36 (கார் ஓட்டுனர் மற்றும் வெல்டர்) த/பெ, நடராஜ் எண்-156,B-பிளாக், பர்மா நகர், தேனாம்பேட்டை 2. ஜீவா, வ/36, த/பெ.தரணி, எண்-5/9, பக்தவச்சலம் தெரு, திருவள்ளுவர்சாலை, தேனாம்பேட்டை என்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளதால் மேற்படி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளிடமிருந்து 5 கத்திகள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்த J-7 வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.T.செந்தில்குமரன் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் அன்று (05.7.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!