Wed. Jul 17th, 2019

விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் ஆளிநர்களை காவல் ஆணையர் பாராட்டினார்

8 Views

சென்னை: பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். நொளம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது. V-7 நொளம்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.செல்வகுமார் (எண்.26239) ஆயுதப்படைக்காவலர் திரு.மரியவிக்டர் (எண்.51048) ஆகிய இருவரும் நேற்று 03.07.2019 அதிகாலை சுமார் 03.30 மணியளவில் நொளம்பூர் பேஸ்-1, 6வது மெயின் ரோட்டில் ரோந்து பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ய முயன்ற போது ஒருவர் தனது பல்சர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பினார். 


மற்றொருவரை போலீசார் கைது செய்து விசாணை செய்த போது அவர் வில்லிவாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் மேற்டி இருவரும் சேர்ந்து நொளம்பூர் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு தப்பி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக பணிபுரிந்த V-7 நொளம்பூர் காவல் நிலைய தலைமைக்காவலர் எஸ்.செல்வகுமார் (எண்.26239) ஆயுதப்படை காவலர் திரு.மரியவிக்டர், (எண்.51048) அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் அன்று (05.7.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!