Wed. Jul 17th, 2019

குற்றவாளிகளை சிறிது நேரத்தில் பிடித்த காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

12 Views

சென்னை: சென்னை, காசிமேடு, இந்திராநகர் அவுசிங் போர்டு, எண்.59 என்ற முகவரியைச் சேர்ந்த ராஜு (27 என்பவர் கடந்த 03.7.2019 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில், ராயபுரம் இறால் மேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் ராஜுவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்து தப்பிச்சென்றுள்ளனர். ராஜு காவல் நிலையம் செல்லும் வழியில், அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த N-2 காசிமேடு சுற்றுக் காவல் ரோந்து வாகன காவல் ஆளிநர்களிடம், யமஹா பேசினோ இருசக்கர வாகனத்தின் அருகில் பேசிக் கொண்டிருந்த குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்.

காவல் வாகனத்தை கண்டதும் குற்றவாளிகள் ஓடவே, உடனே, காவல் ஆளிநர்கள் கண்ணன் மற்றும் முகேஷ் ஓடிச் சென்று குற்றவாளிகள் இருவரையும் மடக்கிப் பிடித்து, அவர்களது இருசக்கர வாகனத்தை திறந்து பார்த்தபோது, அதில் செல்போன்கள்-8 மற்றும் பட்டன் கத்தி-1 ஆகியவை இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்ட குற்றவாளிகள் தினேஷ், (23),  மற்றும் தேசப்பன், (23),என்பதும், இவர்கள் சற்று முன் அதே பகுதியில் ஜார்ஜ் என்பவரின் செல்போனை பறித்து கொண்டு பின்னர் ராஜுவிடம் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது. குற்றவாளிகள் தினேஷ் மற்றும் தேசப்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறப்பாக பணிபுரிந்த N-2 காசிமேடு சுற்றுக் காவல் வாகன காவல் தலைமைக்காவலர் A.கண்ணன் (த.கா.18197) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் (05.7.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!