Sun. Jul 21st, 2019

திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை, திருவெறும்பூர் காவல்துறையினர் விசாரணை

12 Views

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளமேல குமரேசபுரத்தை சேர்ந்தவர்முருகைய்யா, வரது மகன் ரஜினி (எ) கருப்பையா (வயது 32), இவர் மீதுதிருவெறும்பூர் மற்றும் துவாக்குடிகாவல் நிலையங்களில் பல்வேறுவழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால்போலீசார் தயாரித்துள்ள ரவுடிபட்டியலில் ரஜினி (எ) கருப்பையாபெயரும் உள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் எழில்நகரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட்கட்சி திவெறும்பூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் என்பவரின் மகன் ரஞ்சித்(வயது 30) என்பவரும், ரவுடி ரஜினி (எ) கருப்பையா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சியில்இருந்து கீழகுமரேசபுரம் பாலம் அருகேவந்தபோது, அங்கு வழிமறித்த மர்மநபர்கள் சிலர், இருவரையும் ஒட, ஒடவிரட்டி வெட்டியுள்ளனர்.

இதில் ரவுடி ரஜினி (எ) கருப்பையாஉடலில் பல இடங்களில் வெட்டுகாயங்கள் விழுந்த நிலையில், உய்யகொண்டான்
வாய்க்கால் தண்ணீரில்விழுந்து பலியானார்.  உடன் சென்ற ரஞ்சித்( வெட்டுபட்டநிலையில் தப்பி ஒடி, துவாக்குடி அரசுமருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குவந்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர்ஞானவேலன் தலைமையிலான போலீசார்,  உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக திருச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திருச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜியாகு உல் ஹக்,திருவெறும்பூர் உதவி காவல்கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ்டோங்ரே ஆகியோர் சம்பவ இடத்தைநேரில் பார்வையிட்டனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர்போலீசார் வழக்கு பதிவு செய்துகொலையாளிகளை தேடிவருகின்றனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!