Wed. Jul 17th, 2019

14 காவலர் இருசக்கர ரோந்து வாகனங்களை கொடி அசைத்து SP அவர்கள் துவக்கி வைத்தார்

12 Views

தேனி மாவட்டம்: 01.07.2019 முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் விபத்துக்கள், குற்ற நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்ற நிகழ்வுகளில் விரைந்து செயல்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வண்ணம் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 39 இருசக்கர ரோந்து வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும் காவல் நிலையங்களை கண்டறிந்து *காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்* அவர்கள் மேலும் அதனை இன்று முதல் துவக்கி வைத்தார்.

இதனால் பொதுமக்கள் மேலும் பயனடைவார்கள். இதற்காக பொதுமக்கள் *தங்களுடைய புகாரை* *செல்போன் எண்* *Hello Police-8870985100.* *கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் – 100.* * மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04546 – 250100.*  மேலும் அந்தந்த காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்து தங்களது பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு
பயன்பெறலாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!