Mon. Sep 16th, 2019

மடிக்கணினி வழங்காததால் மாணவர்கள் போராட்டம், ஆம்பூர் நகர ஆய்வாளர் அரிகிருஷ்ணன் பேச்சுவார்த்தை

49 Views

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி 2017-18,2017 -19 ஆண்டிற்கான மாணவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்டவர்கள் இந்த பள்ளியில் படித்துள்ளனர்.

இவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது. தற்போது 2019-20ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நேற்று பள்ளியில் மடிக்கணினி வழங்கியதால், ஆத்திரமடைந்த இவர்கள் இன்று பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து தலைமையாசிரியர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விரைந்து வந்த ஆம்பூர் நகர ஆய்வாளர் அரிகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர்மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் உங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தலைமையாசிரியர் மற்றும் ஆய்வாளர் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!