Mon. Sep 16th, 2019

வண்ணாரப்பேட்டை நகை கொள்ளையில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

37 Views

சென்னை : சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், தருண்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 19-ந் தேதி கடையில் தருண்குமாரின் தந்தை மிசிற்லால் மட்டும் இருந்தார்.

அப்போது கடைக்கு வந்த 2 பெண்கள் நகை வாங்க வந்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கு மிசிற்லால் நகைகளை எடுத்து காட்டினார். ஒவ்வொரு நகைகளாக பார்த்த அவர்கள், கடைசியில் நகைவேண்டாம் என்று கூறி சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்ற பின்னர், நகைகளை சரிபார்த்தார். ஆனால் ஒரு பெட்டியில் இருந்த நகைகளை காணவில்லை. இதனையடுத்து கடைக்கு வந்த தருண்குமார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த 2 பெண்களும் பெட்டியில் இருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவாக காட்சிகளை வைத்து 2 பெண்களையும் தேடி வந்தனர். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்களின் பட்டியல் சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள குற்ற ஆவண காப்பகத்தில் உள்ளது.

அவற்றை ஆய்வு செய்தபோது, நகைக்கையில் கைவரிசை காட்டியது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவை செர்ந்த மணி என்பவது மனைவி பாரதி (வயது 45), ஜோலார்பேட்டையை சேர்ந்த சூரியகுமார் என்பவரது மனைவி அலமேலு (37) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 70 கிராம் நகைகளை மீட்டு, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!