Wed. Jul 17th, 2019

பொதுமக்கள் காவல்துறையின் இணைய சேவைகளை பயன்படுத்தி கொள்ள,வேலூர் SP வேண்டுகோள்

27 Views

தமிழக காவல் துறையில் இக்காலகட்டத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் மூலமாக வேலூர் மாவட்ட காவல்துறையில் இராணிப்பேட்டை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட திரு. சேகர் த/பெ சின்ன கண்ணு, பஜனை கோயில் தெரு,புதிய செட்டிதாங்கல், வாலாஜா என்பவர் கடந்த 14.5.2019 ம் தேதி காணாமல் போய் விட்டதாக அவரது மனைவி ஒரு மாதங்கள் சென்று ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அது சம்பந்தமாக cctns missing person Tool மூலம் சோதனை செய்து பார்த்ததில் மேற்படி நபர் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட R.S B cabin At K.M 2141/13 Near up line track out side 50 mts என்கிற இடத்தில் 17.05.2019 ம் தேதி காலை 10.00 மணி அளவில் தூக்கு போட்டு இறந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் கூறுகையில் பொதுமக்கள்www.eservice.tnpolice.gov.in இந்த இணையதள முகவரி மூலமாக தொலைந்து போன நபர்கள்,அடையாளம் தெரியாத பிரேதங்கள், இணையவழி புகார் பதிவு, அதன் நடப்பு விவரங்கள், இழந்த ஆவண அறிக்கை, காவல் துறை தடையில்லா சான்று (pcc) விபத்து வழக்குகளில் உரிய ஆவணங்கள் பெறுவது போன்ற தகவல்களை பெறுவதற்கு பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

இணையம் மூலமாகவே பெறும் வசதிகள் தமிழ்நாடு காவல்துறை மூலம் மேற்படி இணையதள முகவரியில் செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் இச்சேவைகளை உபயோகப்படுத்தி பயன் பெறுமாறும் தெரிவித்தார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!