Wed. Jul 17th, 2019

வேலூர் SP உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

26 Views

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேலூர் மாவட்டத்தினை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன், கடந்த 01.03.2019 ம் தேதி அன்று  சாலை பாதுகாப்பு குழுவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள் உருவாக்கினார்கள்.

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதிக விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் ரோட்டரி சங்கங்கள், தன்னார்வலர் குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு விபத்துக்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று(28.06.2019) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதல்படி ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு மகேஷ்குமார், உதவி ஆய்வாளர் திரு வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும், சைக்கிள்களை எவ்வாறு ஓட்ட வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வினை மாணவிகளிடையே விளக்கி பேசினார்கள். இதில் ரோட்டரி சங்கங்கள், தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!