Sun. Jul 21st, 2019

காந்தி வேடமிட்டு பிச்சை எடுத்து வந்த முதியவரை காட்பாடி காவல்துறையினர் மீட்டு மறுவாழ்வு. சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டு

20 Views

வேலூர்: காட்பாடியில் சிவா நகர் உசேன்தெரு ஹைதராபாத்தை சேர்ந்த 87 வயது முதியவர் சையத் பாஷா இவர் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைப் பிரிந்து காட்பாடி அடுத்துள்ள கிளிதான் பட்டறை இரண்டு கண் கொண்ட மேம்பாலத்தின் கீழ் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் 43 ஆண்டு காலமாக காந்தி வேடமிட்டு காட்பாடியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் தேசத் தந்தை காந்தியடிகள் வேடமிட்டு பிச்சை எடுத்து வந்தார், இவரை மீட்கும் ஒரு நல்லெண்ணத்தோடு வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காட்பாடி காவல் ஆய்வாளர் புகழ் அவர்களின் வழிகாட்டுதல்படி, உதவி ஆய்வாளர் மனோகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமார், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் அவரை மீட்டு நல்ல அறிவுரைகள் கூறி புத்தாடைகள் கொடுத்து அவரை மருத்துவமணைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, சிகிச்சை முடிந்ததும் அவரை அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்க உள்ளனர்.

தேசத் தந்தை காந்தியடிகள் வேடமிட்டு தனது வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுத்து வந்த அவரை மீட்டு எடுத்த காட்பாடி காவல் துறையினரின் இந்த மனிதாபிமான செயல் சமூக ஆர்வலர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!