Wed. Jul 17th, 2019

திருச்சி ஆட்டோ ஆட்டுநர்களுக்கு திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை

18 Views

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.அ.அமல்ராஜ், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மாநகரப் பகுதிகளில் பள்ளி குழந்தைகள் மற்றும் பயணிகளை அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தடுத்திடும் நோக்கில், 25.06.2019 ஆகிய தேதிகளில் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனச் சொதனை மேற்கொண்டு, அதிக எண்ணிக்கயில் பள்ளி குழந்தைகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்த்திடும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் இருச்சக்கர வாகன ஓட்டி வந்த 18 வயதிற்குட்பட்ட நபர்கள் மீது 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களது பெற்றோர்களை வரவழைத்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!