Sun. Jul 21st, 2019

மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : வாலிபர் பலி

19 Views

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்ரீரங்க ராயர் ஓடை பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியை அரிவாளால் வெட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகளை அரிவாளால் வெட்டியதில் காதலர் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், பலத்த காயமடைந்த காதலி தர்ஷினி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், காதல் விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் சில நபர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கனகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!