Wed. Jul 17th, 2019

ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்தி, வால்வுகளை திருடிய கும்பலை பிடிக்க, பொன்னேரி ASP தலைமையில் தனிப்படை

23 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் அருகே சிறுவாக்கம் கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றிலிருந்து சிறுவாக்கம் அனுப்பம்பட்டு, நாலூர், காணியம்பாக்கம், தேவதானம், வேலூர், மெரட்டூர், நெய்தவாயல், வாயலூர், திருவெள்ளைவாயல், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மேலூர், வல்லூர் ஊராட்சிகளுக்கும் மீஞ்சூர் பேரூராட்சி பகுதி முழுவதும் தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் சேமித்து அந்தந்த ஊராட்சிகளில் குடிநீர் குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பி அதன் பிறகு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளும் மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீரான விநியோகம் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மின் விநியோகம் தடை ஏற்பட்டபோது சமூக விரோதிகள் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகளை சூறையாடி சேதப்படுத்தியும் அதில் இருந்த விலை உயர்ந்த பித்தளையால் ஆன வல்வு பொருட்களை திருடி சென்றனர்.

இதனால் நேற்று காலை திடீரென 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீரென குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது உடனடியாக அதிகாரிகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கும்மிடிப்பூண்டி கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் அமலதீபன், வருவாய் மண்டல துணை தாசில்தார் செல்வகுமார் ஒன்றிய அதிகாரிகள் கூட்டுகுடிநீர் நிலையங்களுக்கு சென்று பார்த்தபோது ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் வரவில்லை என்பதை கண்டுபிடித்து ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்தபோது ஆழ்துளைக் கிணறுகள் சேதப்படுத்தி சூறையாடப்பட்டது தெரியவந்தது.

ஆழ்துளைக் கிணறுகளை பைப்புகளை செப்பனிடும் பணியை உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். தகவலறிந்த பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம்பலராமன், பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திரு.பவன்குமார்ரெட்டி,IPS  மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், கூட்டு குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் அமலதீபன் அதிகாரிகள் ஆகியோர் சூறையாடப்பட்ட 17 ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டனர்.

இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பித்தளை வல்வு பொருட்களை காணாமல் போனதுடன் ஆழ்துளை கிணறு பைப்புகளை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர் சமூகவிரோதிகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் 17 ஆழ்துளை கிணறுகளை சூறையாடி சேதப்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம்பலராமன் காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கும்மிடிப்பூண்டி திட்ட செயலாக்க உதவி பொறியாளர் அமலதீபன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து 17 ஆழ்துளை கிணறுகளை சூறையாடி சேதப்படுத்திய சமூகவிரோதிகளை போலிசார் விசாரணைசெய்துவருகின்றனர்.

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!