Mon. Sep 16th, 2019

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர்

52 Views

காஞ்சிபுரம்: தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. சந்தோஷ் ஹதிமானி,IPS., அவர்கள், கடந்த ஜூன் 14 ஆம் தேதி இரத்ததான தினத்தை ஒட்டி தமிழ்நாடு_காவல்துறைசார்பாக நடத்தப்படும் இரத்ததானத்தின் சிறப்பினை கூறி இரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் என  250_க்கும் மேற்பட்ட காவலர்கள் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் வழங்கிய அனைத்து காவலர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!