Wed. Jul 17th, 2019

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

23 Views

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை (20.6.2019 ) அனைத்து மாணவிகளுக்குமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ,பெண் குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட போஸ்கோ சட்டம் (POCSO ACT) பற்றியும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பற்றியும், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களும், அவ்வாறான குற்றங்களிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு பற்றியும் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள்,தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்துரைத்தும், மேலும் மாணவர்களின் எதிர்கால நலன் குறித்த சட்ட அறிவுரைகளையும் விரிவாக எடுத்துரைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகளும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர் .
மாணவிகளுக்கு சிறந்த முறையில் காவல்துறையினர் மூலமாக அளிக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆசிரியப் பெருமக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர். 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!