Wed. Jul 17th, 2019

கத்தி முனையில் வழிப்பறி பிரபல ரவுடி கைது

24 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியில் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு சாலையில் இரவு நேரங்களில் ரவுடி ஒருவர் கத்தியை காட்டி பணம் பறித்ததாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் திரு.இளங்கோவன்,  போலீசார் நேற்று அந்த பகுதிக்கு சென்று பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த ரவுடியை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில் வல்லத்தை சேர்ந்த மாறன்- வ/39 என்பது தெரியவந்தது.

இவர் மீது செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் கொலை,கொள்ளை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது பிரபல ரவுடி மாறனை கைது செய்து போலீசார் அவரிடம் இருந்து 3 ஆயிரம் பணம் மூன்று கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!