Wed. Jun 19th, 2019

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய வேலூர் SP

8 Views

வேலூர்:   வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 12.06.2019-ந் தேதி  உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் IJM தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ‘தடைக்கல்’ என்ற நிகழ்ச்சி, குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மூலமாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் IJM தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த மூத்த அரசு தொடர்பு மேலாளர்கள் திருமதி. சினேகா, திரு. ரூபன், மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ராஜ்குமார், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களால் குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்ட 20 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயசுப்பிரமணியம் (பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் புலனாய்வு பிரிவு) திரு. பொற்செழியன் (மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!