Wed. Jun 19th, 2019

பயணி தவறவிட்ட பணப்பையை காவல்துறையினரிடம் ஒப்படைப்பு, வேலூர் SP பாராட்டு

7 Views

வேலூர்: வேலூர், குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி  07.06.2019 ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் வந்த GVD தனியார் பேருந்தில் பயணம் செய்த மருத்துவ பிரதிநிதி, குடியாத்தம் அருகே தேவராஜபுரம் கிராமத்தில் ராஜ வீதியில் வசிக்கும் காத்தவராயன் மகன் திரு. R.K. லால் என்பவர் பேருந்தினை விட்டு இறங்கும் போது தனது இருக்கையின் அருகில் இருந்த தன்னுடைய பையை எடுக்கும் போது, அருகில் கேட்பாரற்று வெள்ளை நிற தாளில் சுற்றப்பட்ட ரூபாய் 75.000/- ஆயிரம் (500+150) பணம் இருந்தது.

அதனை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் கேட்டபோது, யாரும் என்னுடையது இல்லை என்று கூறியதினால், மேலும் இன்று வரை அந்த பணத்திற்கு யாரும் உரிமை கொண்டாடததால், இன்று (12.06.2019) திரு. இராமகிருஷ்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், திரு. RK லால் மற்றும் வேலூர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சேர்ந்தவர்கள் ஆகியோர் மேற்படி ரூபாய் 75.000/- பணத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியதோடு மேலும் இது சம்பந்தமாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு செய்யப்படுவதாகவும் பணத்தினை இழந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சென்று காவல் நிலையத்தை அணுகி நீதிமன்ற மூலமாக பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்கள்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!