Wed. Jun 19th, 2019

கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடி வந்த குற்றவாளி பிடிப்பட்டார்.

11 Views

சென்னை: தனியார் செல்போன் கடைகளில் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடி வந்த குற்றவாளியை பிடித்து கொடுத்த செல்போன் கடை மேலாளர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.  சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள சங்கீதா மொபைல்ஸ் என்ற செல்போன் ஷோரூமிற்கு கடந்த 10.5.2019 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், கடையை மூடும் சமயத்தில் ஒரு வாலிபர் செல்போன் வாங்குவது போல வந்து பல செல்போன்களை பார்த்துவிட்டு சென்றார். பின்னர் செல்போன்களை சரிபார்த்தபோது, ரூ.60,000/- மதிப்புள்ள புதிய செல்போன் ஒன்று குறைந்தது. உடனே, மேற்படி செல்போன் கடையின் மேலாளர் திரு.சுரேஷ் என்பவர் கடையில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடை மூடும் சமயத்தில் வந்த நபர் மேற்படி செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே, மேலாளர் சுரேஷ் மேற்படி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அவரது செல்போன் கடையின் சென்னையிலுள்ள அனைத்து கிளைகளுக்கு அனுப்பி வைத்து, மேற்படி செல்போன் திருடிய நபர் வந்தால் பிடித்து காவல்துறையில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 03.06.2019 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள அரும்பாக்கம் கிளை சங்கீதா செல்போன் கடைக்கு அதே நபர் செல்போன் வாங்குவது போல வந்து செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த கிளையின் மேலாளர் திரு.தேவராஜ் என்பவர் அந்த நபரை கண்டு, சிசிடிவி கேமரா பதிவில் வந்த நபரின் உருவத்துடன் ஒப்பிட்டு பார்த்து, ஏரியா மேலாளர் சுரேஷுக்கு தகவல் கொடுத்ததன்பேரில், சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து உறுதி செய்து செல்போன் திருடிய நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். செல்போன் ஷோரூம்களில் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போன்களை திருடிய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சங்கீதா மொபைல்ஸ் நிறுவனத்தின் ஏரியா மேலாளர் சுரேஷ் மற்றும் அரும்பாக்கம் கிளை மேலாளர் தேவராஜ் ஆகியோரை (07.06.2019) அன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!