Mon. Jun 17th, 2019

தலைமறைவு குற்றவாளியை பிடித்த காவல் ஆளிநர்களுக்கு ஆணையர் பாராட்டு

12 Views

சென்னை: இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு கோயம்பத்தூரில் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை பிடித்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை, D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகனம்-1 லிருந்த உதவி ஆய்வாளர் திரு.E.கவியரசு மற்றும் தலைமைக்காவலர் S.சரவணன் (த.கா.43289) ஆகியோர் 06.6.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில், சுவாமி சிவானந்தா சாலையில், ஒரு நபர் காவல் வாகனத்தை பார்த்ததும் ரயில்வே பாலத்தின் கீழ் ஓடி இருட்டு பகுதியில் மறைந்தார். உடனே, உதவி ஆய்வாளர் கவியரசு, திருவல்லிக்கேணி காவல் நிலைய கூடுதல் சுற்றுக் காவல் வாகனத்திற்கு தகவல் கொடுத்து வரவழைத்து, கூடுதல் சுற்றுக் காவல் வாகனத்திலிருந்த முதல்நிலைக் காவலர் B.ஜெகன் சசிகுமார் (மு.நி.கா.29525), ஆயுதப்படை காவலர் E.கண்ணன் (கா.47704) மற்றும் சுற்றுக்காவல் வாகன ஓட்டுநர்-1/ஆயுதப்படை காவலர் S.பெரியசாமி (கா.41432) ஆகியோருடன் அப்பகுதியில் தீவிரமாக தேடி தப்பியோடிய நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டார்.

பிடிபட்ட நபரின் பெயர் சுல்தான்அலாவுதீன், வ/21, த/பெ.முகமதுருக்மான், பள்ளிவாசல் தெரு, விருதுநகர் மாவட்டம் என்பதும், இவர் 14.05.2019 அன்று, கோயம்பத்தூர், B-3 வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் கஞ்சி (எ) விஜயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2வது குற்றவாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் கோயம்புத்தூர், B-3 வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டதன்பேரில், B-3 வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய போலீசாரிடம் பிடிபட்ட குற்றவாளி சுல்தான் அலாவுதீன் ஒப்படைக்கப்பட்டார்.

இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு, கோயம்புத்தூர் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியை பிடித்த உதவி ஆய்வாளர் திரு.E.கவியரசு, தலைமைக்காவலர் S.சரவணன் (த.கா.43289), முதல்நிலைக் காவலர் B.ஜெகன் சசிகுமார் (மு.நி.கா.29525), ஆயுதப்படை காவலர்கள் E.கண்ணன் (கா.47704), S.பெரியசாமி (கா.41432) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் அன்று (10.06.2019) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!