Wed. Aug 21st, 2019

திருடர்களை பிடித்த காவல் ஆளிநர்களுக்கு ஆணையர் பாராட்டு

36 Views

சென்னை:இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிப்பு திருடனை பிடித்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

S-12 சிட்லபாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன காவல் அதிகாரிகள் 07.06.2019 அன்று இரவு ரோந்து பணியில் சுமார் 11.00 மணிக்கு வேல்ஸ் கல்லூரி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, KA01 U 9346 என்ற பதிவெண் கொண்ட Yamaha Fz இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்த சொன்னபோது, நிறுத்தாமல் தப்பியோடியவர்களை காவல் குழுவினர் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் கிஷோர், வ/22, த/பெ.துரை, எண்.19, 27வது பிளாக், 3வது மாடி, எழில் நகர், கண்ணகி நகர் என்பதும், மற்றொரு நபர் அருண் (எ) அருண்குமார், வ/19, த/பெ.சிவா, எண்.25, 9வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எழில் நகர், கண்ணகிநகர், சென்னை என்பதும், இவ்விருவரும் சேர்ந்து பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தை திருடியதும், ஒரு முதியவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. பின் அவர்களை கைது செய்தும், இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து, பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளியை பிடித்த S-12 சிட்லபாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் T.வெங்கடேசன், முதல்நிலைக் காவலர் K.மணிகண்டன் (கா.33300), ஆயுதப்படை காவலர் P.சரவணமூர்த்தி (கா.51327) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் K.ராஜேஷ் (HG 2544) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் அன்று (10.06.2019) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!