Wed. Aug 21st, 2019

கோவையில் 7 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

51 Views

கோவை: கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் உள்ள அசாருதீன், போத்தனூரில் உள்ள சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகுமார் என்ற இந்து முன்னணி நிர்வாகி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக எழுந்த புகார்களையும் தேசிய புலனாய்வு அமைப்பினர்கள் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களுடன் கோவையை சேர்ந்த சிலர் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாகவும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!