Wed. Jun 19th, 2019

கஞ்சா விற்பனை செய்த ஒன்பது நபர்கள் கைது, 4 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்

24 Views

மதுரை: மதுரை B4-கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. மதுரைவீரன் மற்றும் B3-தெப்பக்குளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு. ஆறுமுகம், திருமதி. குமாரி ஆகியோர்கள் 10.06.2019 அன்று ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இராமநாதபுரம், கமுதி, பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அஹ்மத் கனி மகன் முஸ்தாக் ரஹ்மான் மதுரை, செல்லூர், சுயராஜ்யபுரத்தை சேர்ந்த  தினேஷ்குமார் (19), மதுரை, அனுப்பானடியை சேர்ந்த  பாலமுருகன் (22), மதுரை, களஞ்சியம், கருப்பிணையேந்தல் நகரை சேர்ந்த பால்பாண்டி (31), மதுரை, இடையபட்டியை சேர்ந்த லிங்கம் (40), மதுரை, விரகனூரை சேர்ந்த  பிரபாகரன் (30), மதுரை, கல்லம்பலை சேர்ந்த  முத்தீஸ்வரன் (25), மதுரை, விரகனூரை சேர்ந்த  சிவராமன் (28), இராமநாதபுரம், முதுகுளத்தூரை சேர்ந்த தனகோபால் மகன் மணிகண்டன்(23) ஆகிய ஒன்பது நபர்களும் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கிராம் கஞ்சா , கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 67 A 4255 YAMAHA இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.15,000/- ம் கைப்பற்றப்பட்டது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!