Wed. Jun 19th, 2019

196 பெண் பயிற்சி காவலர்களுக்கு சட்ட எழுத்துத் தேர்வுகள், வேலூர் SP மேற்பார்வை

15 Views

வேலூர் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 5634 ஆண், பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு, 24 தற்காலிக மற்றும் நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.

பயிற்சியின் ஒரு பகுதியாக நேற்று முதல் மேற்கண்ட 24 பயிற்சி பள்ளிகளிலும் சட்ட எழுத்துத் தேர்வுகள் நடக்கின்றது.  இதில் வேலூர் நிரந்தர பயிற்சிப் பள்ளியில் 196 பெண் பயிற்சி காவலர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு மைய மேற்பார்வையாளர் திரு பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் தேர்வு மையத்தை பார்வையிட்டார்கள். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு ஆசைத்தம்பி அவர்கள் மற்றும் பயிற்சி பள்ளி முதல்வர் திரு வீரராகவன் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!