Wed. Jul 17th, 2019

நகை கொள்ளையர்களை துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கைது செய்த கோவை மாநகர காவல்துறையினர்

23 Views

கோவை : கோவை மாநகரில் கடந்த 4 /6/ 2019 ஆம் தேதி கோவை ராஜவீதியில் உள்ள தங்க நகை கடையில் பணிபுரியும் ஊழியர் தங்க நகைகளை தாராபுரத்தில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டி கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சி1 காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகரில் ராமர் கோவில் அருகில் சென்ற போது தங்க நகை கடை ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இடித்து கீழே தள்ளி அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவரிடமிருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சி1 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித்சரன் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் படி, குற்றப்பிரிவு துணை ஆணையர் திரு. பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையில், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு. சோமசேகர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி விரைந்து சிறப்பாக செயல்பட்டு காந்திபார்க்கை சேர்ந்த பத்ரிநாராயணன், தொப்பம்பாளையத்தை சேர்ந்த டேனியல் பிரசாத், சங்கீதா ஸ்ரீ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோரை 5/6/ 19ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தும், செட்டி பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், மற்றும் பிரீமியர் நகரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் ஆகியோரை 6/ 6 /2019 ஆம் தேதி கைது செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய் 16,00,000/- மதிப்புள்ள தங்க நகைகள், கார் மற்றும் பல்சர் பைக் பறிமுதல் செய்தும் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ் வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விரைவில் (30 மணிநேரத்தில்) குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்த தனிப்படை போலீசாரை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!