Mon. Sep 16th, 2019

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு தேனி மாவட்ட போலீசார் அறிவுறை

62 Views

தேனி மாவட்டம் : தேனி,  கம்பம், தமிழக-கேரள எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு நாள்தோறும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 

இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையிலும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.நல்லுசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் போது ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றவர்களை நிறுத்தி ஹெல்மெட் பாதுகாப்பு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!