Wed. Aug 21st, 2019

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

56 Views

கோவை: கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் – வனப்பகுதியில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் அகற்றும் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது இன்று ( 26.5.19) காலை மாங்கரையில் (ஆனைகட்டி செல்லும் வழி) நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.சுஜீத்குமார் IPS அவர்கள் தலைமையேற்று மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தார். கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதி திரு. பாலாஜி ராஜீ வரவேற்புரையாற்றினார்.

துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுரளி சுந்தரம், கோவை மாவட்ட ஊர்க்காவல் படை துணை பிரதேச தளபதி திருமதி.வித்யாஸ்ரீ தர்மராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ப்ராங்கிளின், ஊர்க்காவல் படை ஆலோசகர் திரு.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.சுஜித்குமார் IPS அவர்கள் பேசுகையில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படையினரின் தன்னலமற்ற சேவை பணி பாராட்டத்தக்கது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் சூலூர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஊர்க்காவல் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

ஊர்க்காவல் படையினர் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் செய்வதோடு நின்றுவிடாமல் இதுபோன்று சமூகத்திற்கும், வன உயிரினங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் புவி வெப்பமயமாதலில் இருந்து தப்பிக்க நாம் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் இது நமது கடமையும் ஆகும் என்றார். அடுத்த தலைமுறைக்கு இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார். மேலும் வனப்பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் வன உயிரினங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் யூனிட் ஊர்க்காவல் படையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவர்கள் மாங்கரை வனப் பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சேகரித்து கொண்டு வந்தனர் சுமார் 30 பைகளில் நிரம்பிய குப்பைகளை குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

மாங்கரை வனப்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.. இப்பகுதியில் உள்ள ஊர்க்காவல் படையினர் இம்மரக்கன்றுகளை பேணிக் காத்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக கம்பெனி கமாண்டர் முனைவர்.M.ஜெய்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!