Sun. Jul 21st, 2019

கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டிய வேலூர் SP பிரவேஷ்குமார், IPS

48 Views

வேலூர்: வேலூர், அரக்கோணம் அருகே கீழ் ஆவதம் காலனியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 32. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த உறவினர் நாகராஜ் (23) என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் அன்வர்திகான்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரா மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தட்சிணாமூர்த்தி கடைக்கு தயிர் வாங்க சென்றார். நாகராஜ் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள், நாகராஜிடம் எங்களை மோட்டார் சைக்கிளில் அன்வர்கான்பேட்டையில் விட்டுவிடு என்று கேட்டு உள்ளார். அதற்கு நானும், என் அண்ணனும் ஒரு வேலையாக வந்துள்ளோம். அண்ணன் கடைக்கு சென்றுள்ளார். என்றார். அப்போது தட்சிணாமூர்த்தி தயிர் வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிள் அருகே வந்தார்.

அவரிடம் 2 வாலிபர்கள் லிப்ட் கேட்டுள்ளனர். அப்போது தட்சிணாமூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை தலையில் குத்தி உள்ளனர். மேலும் கல்லால் தாக்கி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் தட்சிணாமூர்த்தி கீழே சாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் குற்றவாளிகளை பிடிக்க காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர். ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சச்சிதானந்தம் தலைமையில் 2 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

தனிப்படையில் அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் திருமதி.அமுதா, டவுன் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் உள்பட 4 காவல் ஆய்வாளர்கள், 4 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 26 காவலர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் தட்சிணாமூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்தது மின்னல் காலனியை சேர்ந்த வினோத் (26), பார்த்திபன் (31) என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் கொலையாளிகள் அரக்கோணம் அருகே செய்யூர் காலனியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து தனிப்படை காவல்துறையினர் செய்யூர் காலனி பகுதிக்கு சென்று பார்த்திபன், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார், IPS  பாராட்டினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!