Wed. Jul 17th, 2019

அம்பத்தூரில் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்

54 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் பிரஜோஷ் சாரிட்டி டிரஸ்ட் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 200கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்.

இதனை நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர், திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.ஐசக் முன்னிலையில் மருத்துவ முகாம் சென்னை அம்பத்தூர், மேனாம் பேடு புனித மோசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார்.பின்னர் அவர் உடலை பரிசோதனை செய்து கொண்டார். காவல் உதவி ஆணையர் கண்ணன் வழக்குகளை சிறப்பாக கையாளுவதிலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதிலும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், தன்னுடன் பணிபுரியும் காவலர்களிடம் பழகும் முறையிலும் சிறந்து விளங்குபவர். கனிவுடன் பழகும் இவரின் அணுகுமுறையை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முகாமிற்கு, நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவி, திருமதி.ஈவ்லின் தலைமை தாங்கினர். நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஐசக் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியல் சென்னை மாவட்ட தலைவர் திரு.ஸ்டீபன் கலந்து கொண்டார்.

இதனையடுத்து அம்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை,கண் பரிசோதனை, இரத்த கொதிப்பு பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை இலவசமாக செய்து கொண்டனர்.மேலும் அங்கு வந்த பல்வேறு காவல்துறையினர் தங்களின் உடலை பரிசோதனை செய்துக்கொண்டனர்.இவர்களுக்கு மருத்துவர்கள் சிறந்த முறையில் ஆலோசனை வழங்கி மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பயன் அடைந்தனர். இதில் ஊத்துக்கோட்டை தாசில்தார் வில்சன், பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!