Sun. Aug 18th, 2019

சீட்டாட்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த போலிசாருக்கு பாராட்டு

51 Views

சேலம்: சேலம் மாநகரம் கிச்சிப்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, ஓந்தாபிள்ளைகாடு பகுதியில்  12.05.2019 தேதி 21.00 மணிக்கு, ஒருகும்பல் பணம் வைத்து சீட்டாடுவதாக நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கிச்சிப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு.கதிரவன், நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள், திரு.சாம்பசிவம், திரு.மு த்துசாமி மற்றும் கிச்சிபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.கோபால், திரு.அழகு,திரு.தட்சிணாமூர்த்தி, தலைமை காவலர்கள் திரு.ஹரிபாபு, திரு.செந்தமிழ்செல்வன்ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடம் சென்று சீட்டாட்ட கும்பளை சுற்றிவளைத்து, குற்றவாளிகள் காளியப்பன், கண்ணன், வெங்கடேஸ், அய்யாதுரை, அங்கப்பன், மேகநாதன்  ராதாகிருஷ்ணன்,  ஜித்தேந்திர பிரபு, செந்தில்குமார், ராஜி, மணி ஆகிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சீட்டாட்டத்திற்கு பயன்படுத்திய ரூபாய் 1,74,000/- மற்றும் 12 செல்போன்கள் பரிமுதல் செய்து, அவர்களை காவல் நிலை கொண்டுவந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீட்டாட்ட கும்பளை சுற்றிவளைத்து கைது செய்த காவல்துறையினரை, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!