Wed. Jul 17th, 2019

தமிழகத்தில் முதன்முறையாக ஈரோடு மாவட்ட பெண் காவலர்களுக்கு வார விடுமுறை, ஈரோடு SP அறிமுகம்

95 Views

ஈரோடு மாவட்ட காவல்துறையில் பெண்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை 311 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்-1, துணைக் காவல் கண்காணிப்பாளர் – 2, பெண் ஆய்வாளார்கள் -8, பெண் உதவி ஆய்வாளர்கள்-18, பெண் காவலர்கள்-282 (சட்டம் ஓழுங்கு பிரிவில் -212, ஆயுதப்படை பிரிவில் -70) உள்ளனர்.

இவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்தது. இதனை தொடந்து காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ், கடந்த 26 தேதி முதல் பெண் காவலர்களுக்கு விடுப்பு அளிக்கும் திட்டத்தை தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி, காவலர் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு பொதுமக்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இம்மாவட்டத்தில் பண்புரியும் பெண் காவல் அலுவலர்கள் தங்கள் குடும்பத்தினை பராமரிக்கவும், அவர்களின் உடல் நலத்தை பேணிக்காத்து, இத்துறையில் சிறப்பாக பணியாற்றிட, பெண் உதவி ஆய்வாளார்கள் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை உள்ளவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என மாதத்தில் ஓவ்வொருவருக்கும் 4 நாட்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவல்துறையின் அன்றாட பணிகள் எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.   கடந்த 26.05.2019-ம் தேதி ஞாயிறு முதல் இத்திட்டம் பெண் காவல் அலுவலர்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுத்தால் பெண் அலுவலர்கள் தங்களது குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் வீட்டில் அதிக நேரம் அவர்களுடன் செலவிட்டு, மனநிறைவுடன் இருந்தால் வாரத்தின் இதர நாட்களில் அவர்கள் பணியில் சிறப்பாக பணியாற்ற ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!