Wed. Aug 21st, 2019

அரக்கோணம் DSP தலைமையில் 20000 பக்தர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு

81 Views

வேலூர்:  அரக்கோணம் நகரில் நேற்று சுவால் பேட்டையில் உள்ள தருமராசா கோயில் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர். இதில் சுமார் இருபதாயிரம் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா ,  காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.மதியழகன் மற்றும் திரு.மஞ்சுநாதா , 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 28 காவலர்கள்,  30 ஊர்காவல் படையினர், 10 ஆயுதப்படையினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

இதனை கண்ட பொதுமக்களும், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்களை பாராட்டினர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!