Wed. May 22nd, 2019

ஆளுமை திறன்மிக்க காவல் ஆய்வாளர் குணவர்மன்

30 Views

சென்னை: சென்னை எஸ்பிளனேடு(B2) காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.குணவர்மன். பெயருக்கு ஏற்றார் போல் குணத்திலும் சிறந்து விளங்குபவர். வழக்குகளை சிறப்பாக கையாளுவதிலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதிலும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், தன்னுடன் பணிபுரியும் காவலர்களிடம் பழகும் முறையிலும் சிறந்து விளங்குபவர். கனிவுடன் பழகும் இவரின் அணுகுமுறையை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற வழகறிஞர்களிடம் நன்மதிப்பு பெற்று உள்ளார். அதற்கு காரணம் அவர் முன்பு உயர்நீதிமன்றத்தில் காவல் பணியில் சிறப்பாக பணியாற்றி அங்கு வரும் வழகறிஞர்களின் அன்பை பெற்றார். காவல் பணியை பேரார்வத்துடன் ஏற்று தினந்தோறும் ஆர்வத்துடனும் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்.

குறிப்பாக தமக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை வழிநடத்துவதில் ஆளுமை திறன் மிக்கவர். எடுத்துக்காட்டாக, B2 காவல்நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் காவலா் திரு.தனசேகரன். காவல் ஆய்வாளரின் அறிவுறுத்தலின் பெயரில் வாகன ரோந்து பணியில் ஈடுபடும் போது, அது இரண்டு வாரங்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே காவல் ஆய்வாளர் திரு.குணவர்மன் விசாரணையை முடுக்கி விட்டார்.

விசாரணையில் காணாமல் போன ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் என தெரியவந்தது. இதுகுறித்து இராயபுரம் காவல் நிலையத்தில் புகாரும் பதியப்பட்டிருந்தது. உடனடியாக அவா்களை பி2 காவல் நிலையத்திற்கு வரவழைத்து, காவல் ஆய்வாளா் திரு.குணவர்மன் உத்தரவின் பேரில், உாியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடினமான சாவல்கள் நிறைந்த பணியான காவல்துறை பணியில் சாவல்களை சமாளித்து, திறம்பட செயலாற்றி வரும் காவல் ஆய்வாளர் குணவர்மனை, நமது போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியரும், காவலர் தினம் நிறுவனருமான திரு.அ.சார்லஸ் நேற்று சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

அவருடைய பணி மேன்மேலும் சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!