Wed. Jul 17th, 2019

போக்குவரத்தை சீர்செய்த திருச்சி காவல் துணை ஆணையருக்கு பாராட்டு

64 Views

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் திருத்தேரில் அதிகாலை 4.30 மணியளவில் கோயிலிருந்து சாமிபுறப்பாடு தேரில் 5.35. மணி அளவில் எழுந்தருனார். நான் மாடவீதிகளில் பக்தர்கள் பக்திபரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு  திருத்தேரை வடம்பிடித்து லட்சக்கணக்கானோர் திருத்தேரை இழுத்தனர்.

தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு திருச்சிக்கு நேற்று உள்ளூர் விடுமுறையை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். உள்ளூர் வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடாக திருச்சி மாவட்ட காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறைதுணை ஆணையர் திரு.மயில்வாகனம் அவரின் தலைமையில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியின்போது கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் கூட்ட நெரிசலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனையடுத்து காவல்துறை துணை ஆணையர் திரு.மயில்வாகனம் சாலையில் நின்று போக்குவரத்து பாதிப்பை சரி செய்தார்.

காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனம் அவர்களை பக்தர்களும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!