Wed. May 22nd, 2019

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு குறித்து ராஜஸ்தான் ஐ.பி.எஸ். அதிகாரி ஆலோசனை

31 Views

சென்னை: சென்னை, மதுராந்தகம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புடன் ராஜஸ்தான் ஐ.பி.எஸ். அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரில் கடந்த 25 ஆண்டுகளாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக மாஸ்டர் ரத்தினம் என்பவர் இருந்து வருகிறார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் திருவிழா நாட்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் பணிகள், ரோந்து பணிகள் மற்றும் இரவு நேர ரோந்து பணிகள் போன்றவற்றில் உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து பணிபுரிவது வழக்கம்.

இந்த நிலையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரானுசர்மா ஐபிஎஸ் என்பவர் மதுராந்தகம் நகருக்கு வந்து இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் ரத்தினத்திடம் கேட்டறிந்தார்.

மதுராந்தாகம் டி.எஸ்.பி அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது ஏ.எஸ்.பி திரு.மாணிக்கவேல், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் திரு.ஏழுமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!