Wed. Jul 17th, 2019

சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ள உதவி ஆய்வாளர் மகளுக்கு S.P. முரளி ரம்பா வாழ்த்து

57 Views

தூத்துக்குடி: சிலம்பத்திற்கான தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ள உதவி ஆய்வாளர் மகள் செல்வி.ஸ்வேதாவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,IPS வாழ்த்தினார்.

கடந்த 26.04.2019 முதல் 28.04.2019 வரை 3 நாட்கள் நடைபெற்ற சிலம்ப விளையாட்டுக்கான தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, பங்களாதேஷ், மற்றும் சிங்கப்பூர், ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 600 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணி புரியும் ஜெயமணியின் மகள் ஸ்வேதா கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். இதில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர் இதன் மூலம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா , ஸ்வேதாவை அழைத்து பாராட்டினார், அவர் மேலும் மேலும் வெற்றி பெற தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவரை வாழ்த்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!