Sun. Jul 21st, 2019

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை வழக்கில் பெண் ஊழியரை காதலனுடன் கைது செய்தது போலீஸ்

55 Views

கோவை: ராமநாதபுரம் பகுதியில் செயல்படும் முத்தூட் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ரேணுகாதேவி மற்றும் திவ்யாவை தாக்கி முகமூடி கொள்ளையன் 814 பவுன் நகைளை கொள்ளையடித்து சென்றதாக கடந்த 27-ந் தேதி மாலை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து இரண்டு ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரேணுகா தேவியின் செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. கொள்ளை வழக்கில் ரேணுகா தேவிக்கு தொடர்பு உள்ளது தெரிந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் அளித்த தகவலின் பேரில், கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ்(32) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரளாவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து, அவனிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவாக செயல்பட்டு கொள்ளையனை கைது செய்த காவல்துறையினருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!