Sun. May 19th, 2019

கருக்கலைப்பு ஊசி போட்ட கர்ப்பிணி உயிரிழப்பு, டாக்டருக்கு வலைவீச்சு

34 Views

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய சித்த மருத்துவரால் ஊசி போடப்பட்ட கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. கர்ப்பிணியான இவர் இன்று காலை பொள்ளாச்சி நகரில், சித்த மருத்துவர் முத்துலட்சுமியை சந்தித்து கருவைக் கலைக்கும்படி நாடியுள்ளார்.

👉இதையடுத்து சித்த மருத்துவர் முத்துலட்சுமி, வனிதாவுக்கு இன்று காலை கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். இந்நிலையில் மாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரை ஏற்று சித்த மருத்துவர் வனிதா மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே கர்ப்பிணி உயிரிழந்த தகவலை அறிந்த முத்துலட்சுமி தலைமறைவானார். அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!